சகோதரத்துவம்

சகோதரத்துவம்

சகோதரத்துவம்
சகோதரத்துவம்

சகோதரத்துவம் என்றால் என்ன

       நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகிய நெறிகள் இந்திய மக்களிடையே சகோதர மனப்பான்மையை உருவாக்கினால் தான் அவற்றுக்குப் பொருள் உண்டு. இந்தியாவில் பல இன, மொழி, சமய வேறுபாடுகள் நிலவிய போதும், மக்கள் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற எண்ணம் உருவாக வேண்டும். இந்திய மக்களிடையே சகோதர உணர்வை உருவக்கவும், அனைவரும் இந்தியர் என்ற எண்ணத்தை வலுப்படுத்தவும் தான் “ஒற்றைக் குடியுரிமை” முறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

சகோதரத்துவம்

       இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கடமைகள் பகுதியில் விதி 51- A(e)-ல் கூறுவதாவது = இந்திய மக்களிடையே நல்லிணக்கதையும், சகோதர மனப்பான்மையையும் வளர்ப்பதுடன், எல்லாவிதமான சமய, மொழி, வட்டார, பிரிவினை வேறுபாடுகளையும் கடந்து அனைவரும் இந்தியக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வை வளர்ப்பதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும் (it shall be the duty of every citizen of India to promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India transcending religious, linguistic, regional or sectional diversities)

சகோதரத்துவம் பற்றி அம்பேத்கர்

       சகோதரத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து அரசியல் நிர்ணய சபையில், அம்பேத்கர் கூறியது, “சகோதரத்துவம் என்றால் என்ன? இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதர மனப்பான்மையை – அனைவரும் இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணத்தை வளர்ப்பது தான் சகோதரத்துவம். அந்த உணர்வை தான் சமுதாய வாழ்க்கைக்கு ஒற்றுமையையும் வலிமையையும் தருகிறது; அதை அடைவது சிரமமானது” என்றார்.

      

 

 

 

 INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

Leave a Reply