நீதி

நீதி

நீதி

நீதி என்றால் என்ன

       குடிமக்கள் (Citizens) அனைவருக்கும் நீதி (Justice) கிடைக்கும் என்று முகவுரை உறுதியளிக்கிறது. ஒருபுறத்தில் தனிநபர்களுக்கு இடையேயும், மக்கள் பிரிவுகளுக்கு இடையேயும், தனிநபர்களுக்கும் மக்கள் பிரிவுகளுக்கும் இடையேயும் நலன் பேணுவதுடன், மற்றொரு புறத்தில் சமுதாயத்தின் நலனையும் பேணுவதே நீதியாகும். ஏனைய கோட்பாடுகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை விட மேலான இடத்தை நீதிக்கு வழங்கியுள்ளது முகப்புரை.

         நீதி என்பது சமூக (Social), பொருளாதார (Economical), அரசியல் (Political) நீதி என்று முகவுரை வரையறை செய்கிறது. இங்கும் கூட அரசியல் நீதியை விட, சமூக நீதிக்கும், பொருளாதார நீதிக்கும் தான் முதலிடம் தரப்பட்டுள்ளது.

          சமூகநீதி (Social Justice) என்பது குடிமக்கள் அனைவரும்  – அவர்களுடைய பிறப்பு, சாதி, சமயம், இனம், பால் போன்ற வேருபாடுகளுக்காகப் பாரபட்சம் ஏதுமின்றி – சமமாக நடத்தப்படுவதே ஆகும். பொது இடங்களை அணுகுவது குறித்த விசயங்களில் பாரபட்சம் காட்டுவதை அரசியல் சட்டத்தின் 15-வது பிரிவு தடை செய்கிறது.

      “உணர்ச்சிப்பூர்வமான மக்களைச் சமூக நீதிக்கோட்பாடு எப்போதுமே ஈர்த்திருக்கிறது. மார்க்சியக் கோட்பாடு பல லட்சக்கணக்கான மக்களை ஈர்த்ததற்கு, அது அறிவியல் ரீதியான கொள்கையை உருவாக்க முயன்றது காரணமில்லை; மாறாக சமூக நீதியின்பால் அது கொண்டிருந்த பெருவிருப்பமே அதற்கு காரணம்” எனக் நேரு (Nehru) கூறுகிறார். மேலும் சமூக நீதியானது பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்தையும், அவர்களுக்கு வழங்கப்படும் (improvement in the conditions of backward classes  and women) சலுகைகளையும் உறுதி செய்வதாகும்.

       பொருளாதார நீதி (Political Justice) என்பது பொருளாதார ரீதியாக மக்களை பிரிக்காமல் இருப்பதாகும். செல்வம், வருமானம் மற்றும் சொத்து ஆகியவற்றில் வெளிப்படையான ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது இதில் அடங்கும். சமூக நீதி மற்றும் பொருளாதார நீதியின் கலவையானது ‘விநியோக நீதி’ (A combination of social justice and economic justice denotes what is known as ‘distributive justice’) என்று அழைக்கப்படுவதைக் குறிக்கிறது.

       பொருளாதார நீதி என்பது ஏழையும் செல்வந்தரும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதுடன், இரு பிரிவினருக்கும் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு முயற்சி மேற்கொள்வது ஆகும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பகுதி நான்கில் உள்ள அரசின் வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் உள்ள விதி 36 – 51 வரையிலான விதிகள், நீதியை காக்கவும், புதிய சமூக-பொருளாதார அமைப்பை உருவாக்க வேண்டுமெனவும் கூறுகின்றன.

       அரசியல் நீதி (Political Justice) என்றால், குடிமக்கள் அனைவரும் சாதி, சமய, இன வேறுபாடுகள் அல்லது பிறந்த இட வேறுபாடு எதுவுமின்றி அரசியல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் உரிமையாகும். 16-வது பிரிவு அரசு வேலை வைப்புகளில் சமவாய்ப்புகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்தோர் அனைவருக்கும் தேர்தலில் பங்கு பெறுவதற்குச் சமவாய்ப்பு அளிக்க 325, 326 ஆவது பிரிவுகள் வகை செய்கின்றன.

 

 

 

 

 INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

Leave a Reply