11TH TAMIL மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு
11TH TAMIL மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு
- மலை, மனித சமூகத்தின் ஆதி நிலமாகும்.
- தமிழ் அகத்திணையியல், மலையும் மலை சார்ந்த பகுதியையும் குறிஞ்சி என்று குறிக்கும்.
- குறிஞ்சி நிலம் சார்ந்த சங்கப் பாடல்கள் மலையோடு இயைந்த தமிழர்தம் சீரிய வாழ்வினைப் பேசின.
- மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை OROLOGY என்ற கலைச்சொல்லால் அழைப்பர்.
- தமிழர் வாழ்வில் மலைகள் பெறும் சிறப்புக் குறிப்பிடத்தக்கது.
கமில் சுவலபில்
- திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள் ஆவர்.
- திராவிடர்களை, “மலைநில மனிதர்கள்” என்று அழைத்தவர் = கமில் சுவலபில் (Kamil Zvelebil)
கடவுளையும் மலையையும் தொடர்புபடுத்தல்
- “சேயோன் மேய மைவரை உலகம்” என்று கூறிய நூல் = தொல்காப்பியம்
- “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்று கூறிய நூல் = திருமுருகாற்றுப்படை
- பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடையெழு வள்ளல்கள் எழுவருமே மலைப்பகுதிகளின் தலைவர்களாகவே விளங்கியுள்ளனர்.
திராவிடர்களின் மலைப்பெருமிதம்
- பல்வேறு திராவிட இனக்குழுப் பெயர்கள் “மலை” என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளன.
மால் பஹாடியா |
ஜார்கண்ட் |
மல அரயன் |
மேற்குத்தொடர்ச்சி மலைகள் – கேரளம் |
மல குறவன் |
நெடுமங்காடு – கேரளம் |
மல மூத்தன் |
எர்நாட் – கேரளம் |
மல பணிக்கர் |
வட கேரளம் |
மலயன் |
பாலக்காடு – கேரளம் |
மல வேடா |
இடுக்கி – கேரளம் |
மலேரு |
தட்சிண கன்னடா – கர்நாடகம் |
- பல்வேறு திராவிடப் பழங்குடி இனக்குழுப் பெயர்களும் “மலை”, “குன்று” என்ற பொருள் தரும் சொற்களையே அடிப்படையாக கொண்டு ஆக்கம் பெற்றுள்ளன.
கோட்டா |
நீலகிரி, தமிழ்நாடு |
கொண்டா தோரா |
ஆந்திரப்பிரதேசம் |
கோண்டு, கொய்ட்டெர் |
ஒடிஸா |
நீலகிரி தோடர் இன மக்கள்
- நீலகிரியில் உள்ள தோடர் இனத்தவர் பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர்கள்.
- எனவே அவற்றைச் சுற்றி உயர்ந்த மதிற்சுவர்களை அமைத்திருக்கின்றனர்.
- அவர்களின் வீடுகளில் திண்டுகள் (மேடைகள்) முக்கிய இடம் பெறுகின்றன.
மலைக்குடியிருப்புகள்
- குறும்பர் மொழியில் தாழ்வாரத்தைக் குறிக்கும் ‘மெட்டு’ என்ற சொல் அதன் உயரமான, மேடான அமைப்பை விளக்குகின்றது.
- ஆந்திராவிலும் ஒடிஸாவிலும் உள்ள ‘ஜதாப்பு’ எனப்படும் திராவிடப் பழங்குடியினரின் குடியிருப்புகள் பெரும்பாலும் மலை உச்சிகளில் அமைந்துள்ளன.
- உயரமான மேடை, திண்ணை , சுற்றுச்சுவர்கள், மேலோடை நீர் ஆகியவை திராவிடப் பழங்குடியினரின் வாழ்விட வடிவமைப்பிலும் வாழ்வியலிலும் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தைக் காட்டுகின்றன.
திராவிட சொல் ‘மலை’
- திராவிடச் சொல்லான ‘மலை’ என்பது சமஸ்கிருத மொழியில் ‘மலய’ என்று வழங்கப்படுகிறது.
- வடமொழியில் ‘மலய’ என்ற சொல் மலபாருக்கு மேற்கே உள்ள மலைகளையே குறிக்கிறது.
மலை, குன்று வேறுபாடு
- தமிழில் குறிஞ்சி நிலம் தொடர்பான சொற்களில் ‘மலை’ என்பது ‘உயரமானது’ என்றும் ‘குன்று’ என்பது ‘உயரம் குறைவானது’ என்றும் பொருள்படுவனவாகும்.
- மலை, குன்று என்னும் இரண்டு சொல்லாட்சிகளும் வெளிக்கொணரும் உயர வேறுபாட்டை வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மலை சார்ந்த இடப்பெயர்கள் உறுதி செய்வது வியப்பளிக்கின்றது.
தமிழ் சொல் ‘வரை’
- தமிழ் மொழியில் ‘வரை’ என்ற சொல் கோடு, மலை, சிகரம், விளிம்பு, கரை, எல்லை, நுனி போன்ற பொருள்களில் பயன்படுத்தப்படுகின்றது.
- நுனி முதல் அடி வரை மற்றும் அடி முதல் நுனி வரை என்ற தொடர்களில் ‘வரை’ என்ற சொல் விளிம்பு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிந்துவெளிப் பகுதிகளில் மலை
- திராவிட நிலப்பகுதிகளின் மலை தொடர்பான சொற்கள், சிந்துவெளிப் பண்பாட்டு நிலப்பகுதிகளில் தற்செயலாக வழங்கப்படவில்லை.
- அவை, காரணம் கருதியே வழங்கப்பட்டன.
திராவிட சொற்கள் |
மாநிலம் | மாவட்டம் |
மலை |
உத்தரகாண்ட் |
சமோலி |
ஜார்க்கண்ட் |
கும்லா | |
உத்திரப்பிரதேசம் |
ஜவன்பூர் |
|
வரை |
குஜராத் | வல்ஸட் |
மகாராஷ்டிரா |
தானே |
|
ஹிமாச்சலப் பிரதேசம் |
காங்க்ரா |
|
மலா |
பஞ்சாப் |
ஜலந்தர் |
ராஜஸ்தான் |
அஜ்மீர் |
|
கர்நாடகம் |
உடுப்பி |
தென்னிந்தியாவில் மலை
- தமிழ்நாட்டில் மட்டும் ‘மலை’ என்ற சொல் 17 இடப்பெயர்களில் முன்னொட்டாகவும் 84 இடப்பெயர்களில் பின்னொட்டாகவும் இடம் பெற்றுள்ளது.
- ஆந்திர மாநிலத்தில் ‘மல்’ என்ற வேர்ச்சொல் ஐகார ஈறு பெற்று மலை என வழங்கப்படுவதற்கு மாறாக ஆகார ஈறு பெற்று ‘மலா’ என்று வழங்கப்படுகிறது.
- கர்நாடகத்தில் மலை என்ற வடிவம் ‘தோணிமலை’ என்னும் இடப்பெயரில் ஒரே ஒரு முறை பயன்படுத்தப்படுகிறது.
- கர்நாடகத்தில் மலையைக் குறிக்கும் மற்றொரு சொல்லான ‘மலே’ 15 இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.
- கேரள மாநிலத்தில் பத்து ‘மலை’ விகுதி இடப்பெயர்கள் உள்ளன.
- மேற்சொன்ன மலை, மலா, மலே எனப்படும் சொற்கள், தென்னிந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ வருகின்றனவே அன்றி, தனிச்சொல்லாக வழங்கப்படவில்லை .
தமிழ்ச் சொல் ‘கோட்டை’
- தமிழ் மொழியில் ‘கோட்டை’ என்ற சொல், காவல் மிகுந்த காப்பரண் கொண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட கட்டமைப்பைக் குறிக்கிறது.
- திராவிட வேர்ச்சொல் அகராதி, கோட்டை என்ற சொல்லோடு தொடர்புடைய பல்வேறு திராவிட மொழிச் சொற்களைக் கீழ்வருமாறு பட்டியலிடுகிறது.
தமிழ் |
கோட்டை, கோடு |
மலையாளம் |
கோட்ட, கோடு |
கன்னடம் |
கோட்டே, கோண்டே |
தெலுங்கு |
கோட்ட |
துளு |
கோட்டே |
தோடா |
க்வாட் |
- இந்தியாவில் ‘கோட்டை’ என்று முடியும் 248 இடப்பெயர்களும் தமிழ்நாட்டில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- இச்சொல் செயற்கையான காப்பரண்களான கோட்டைகளைக் கட்டியெழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியில் தோன்றியது என்பதைவிட அதற்கும் தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதுதான் உண்மையாகத் தோன்றுகிறது.
- ஏனெனில் ‘கோடு’ என்ற தமிழ்ச்சொல்லுக்கு மலையுச்சி, சிகரம், மலை என்ற பொருளோடு வல்லரண், கோட்டை என்ற பொருள்களும் உண்டு.
- மலையரண், காட்டரண் போன்ற இயற்கை அரண்கள், மதில் சுவர்களால் அமைந்த செயற்கையான கோட்டைகளை விடவும் தொன்மையானவை.
தமிழ்ச்சொல் ‘கோடை’
- ‘கோடை’ என்னும் தமிழ்ச்சொல் ‘மலை’ என்னும் பொருளில் வழங்குவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்
- கொற்கை, வஞ்சி, தொண்டி என்னும் ஊர்ப் பெயர்கள் பழந்தமிழர்களின் அரசியல், பொருளியல், மற்றும் பண்பாட்டு உருவாக்கத்தின் விளைவாக உருவானவை.
- சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய பெயர்கள் ஆணிவேர் அடையாளங்கள் ஆகும்.
- இப்பெயர்களில் ஒன்றைக்கூட வடமொழி இலக்கியங்கள் பதிவு செய்யவில்லை .
- சங்ககாலத் தமிழ் மன்னர்களின், குறுநிலத் தலைவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன.
- கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் (KVT COMPLEX) காட்டும் பொதுத்தன்மைகள் மிக முக்கியமானவை.
- இவை கடந்த கால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள்.
ஆர் பாலகிருஷ்ணன்
- இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளரான ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப, 28 ஆண்டுகளாக, – இடப்பெயராய்வில் ஈடுபட்டு வருகிறார்.
- வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள ‘கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை’ ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர்.
- இவரின் நூல்கள் = அன்புள்ள அம்மா, சிறகுக்குள் வானம், சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
- 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணித் தேர்வை, முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர்.
- தற்போது ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆணையராகப் பொறுப்பில் இருக்கிறார்.
- இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்
- காப்பிய இலக்கணம்
- வை.மு.கோதைநாயகி
- இலக்கியத்தில் மேலாண்மை
- 11TH TAMIL மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு
- 11TH TAMIL மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு
- 11TH TAMIL மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு
- 11TH TAMIL மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு
- அதிசய மலர்
- தேயிலைத் தோட்டப் பாட்டு
- புறநானூறு
- சங்கக்காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக