Skip to content
11TH TAMIL காவடிச்சிந்து
11TH TAMIL காவடிச்சிந்து
11TH TAMIL காவடிச்சிந்து
காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது.
காவடிச்சிந்து
தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம்.
முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர்.
அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து எனும் பாவடிவம் தோன்றியது.
இந்நூலின் தலைவன் = கழுகுமலைத் தலைவன் முருகன்
அருஞ்சொற்பொருள்
புயம் – தோள்
வரை – மலை
வன்னம் – அழகு
கழுகாசலம் – கழுகு மலை
துஜஸ் தம்பம் – கொடி மரம்
சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
விலாசம் – அழகு
நூபுரம் – சிலம்பு
மாசுணம் – பாம்பு
இஞ்சி – மதில்
புயல் – மேகம்
கறங்கும் – சுழலும்.
இலக்கணக்குறிப்பு
தாவி – வினையெச்சம்
மாதே – விளி
பிரித்து எழுதுக
திருப்புகழ் = திரு + புகழ்
உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
சென்னிகுளம் அண்ணாமலையார்
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து – அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.
இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும்.
தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்
18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.
இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.