11TH TAMIL இயற்கை வேளாண்மை

11TH TAMIL இயற்கை வேளாண்மை

11TH TAMIL இயற்கை வேளாண்மை

  • மனித உயிர்கள் வாழ அடிப்படையாக விளங்குவது வேளாண்மை.
  • “உலவு உலகிற்கு அச்சாணி” என்று கூறியவர் = வள்ளுவர்
  • “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று கூறியவர் = பாரதியார்
11TH TAMIL இயற்கை வேளாண்மை
11TH TAMIL இயற்கை வேளாண்மை

தமிழ்நாட்டின் மாநில மரம்

  • தமிழ்நாட்டின் மாநில மரம் எனப்படுவது = பனைமரம்
  • பனைமரம் 11 ஆண்டுகளில் பலன் தருபவை ஆகும்.

ஏழைகளின் கற்பக விருட்சம் மரம்

  • ஏழைகளின் கற்பக விருட்சம் மரம் எனப்படுபவது = பனைமரம் ஆகும்.
  • பனைமரம் சிறந்த காற்று தடுப்பானாக பயன்படும்.
  • நீர்மட்டம் குறையாமல் நீரை சேமித்து வைக்கும் தன்மை கொண்டது இம்மரம்.

மதிப்பு கூட்டுப் பொருள்கள்

  • பனைமரத்தில் இருந்து நுங்கு, பதநீர் மட்டுமில்லாமல் மதிப்புகூட்டுப் பொருள்களான கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றையும் உருவாக்கலாம்.
  • பனைமரத்திலிருந்து கிடைக்கும் பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி – போன்றவற்றைத் தயாரித்து விற்பதன்மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.
  • இவ்வாறு ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை மதிப்புக் கூட்டுப்பொருள் என அழைக்கின்றனர்.
11TH TAMIL இயற்கை வேளாண்மை
11TH TAMIL இயற்கை வேளாண்மை

ஒற்றை வைக்கோல் புரட்சி

  • வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வு செய்தவர், ஜப்பான் அறிஞர் மசானபு ஃபுகோகா ஆவார்.
  • 1978 ஆம் ஆண்டு மசானபு ஃபுகோகா அவர்கள் எழுதிய நூல் = ஒற்றை வைக்கோல் புரட்சி ஆகும்.
  • மசானபு ஃபுகோகா கூறிய 5 வேளாண்மை மந்திரங்களாவன,
    1. உழப்படாத நிலம்
    2. வேதியியல் உரம் இல்லாத உற்பத்தி
    3. பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு
    4. தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி
    5. ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்

மசானபு ஃபுகோகா

  • மசானபு ஃபுகோகா கூற்று = “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும்கூட. நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்”
11TH TAMIL இயற்கை வேளாண்மை
11TH TAMIL இயற்கை வேளாண்மை

தொழு உரம் என்றால் என்ன

  • நஞ்சை நிலத்திற்கான தொழு உரம் = மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றை கலந்து வைக்கோலை மட்கச் செய்து உருவாக்குவது ஆகும்.
  • புஞ்சை நிலத்திற்கான தொழு உரம் = காய்ந்த இலைச் சருகு + ஆடு, மாடுகளின் சானங்களை எரித்து கிடைக்கும் சாம்பல் ஆகியவற்றை இணைத்து உருவாக்குவது ஆகும்.

நெல்லுக்கு ஊடு பயிர்

  • நெல்லுக்கு ஊடு பயிராக இடப்படுவது = உளுந்து ஆகும்
  • இதை அறுவடை செய்த பின், அதன் வேர் முடிச்சுகளில் இருக்கும் ஹைட்ரஜன், நிலத்தின் வளத்தை பெருக்க உதவும்.

இயற்கை வேளாண்மை என்றால் என்ன

  • இயற்கை வேளாண்மை என்றால், ஒட்டு மொத்தமா விதைக்கிறதுல இருந்து விளைச்சல் முடிகிற வரைக்கும் வேதிக் கலப்பே இல்லாத நிலை ஆகும்.

இயற்கை பூச்சிக்கொல்லி

  • வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை எல்லாவற்றையும் நன்றாக இடித்து கோமியத்தில் ஊற வைத்து வடிகட்டி உருவாக்கப்படுவது “இயற்கை பூச்சிக்கொல்லி” ஆகும்.

 

 

 

 

Leave a Reply