இந்த உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி.
சொற்கள் தொண்டையில் இருந்து எழுகின்றன.
அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்தி பொருள் வேறுபாடுகளை ஏற்படுத்த இயலும்.
எர்னஸ்ட் காசிரர்
மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக்கொள்கின்றன.
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
நேரடி மொழி என்றால் என்ன
எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.
பேச்சு மொழியில் கவிஞனின் கவிதைகள் அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.
பேச்சு என்பது தன்னைத் திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு.
சில கவிஞர்கள் தங்களுடைய கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகனுடன் பேசுவது போல் அமைப்பதே “நேரடி மொழி” என்பர்.
நேரடிமொழி எனப்படும் பேச்சுமொழிக்கு ஒரு போதும் பழமை தட்டுவதில்லை.
மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா
நேரடி மொழி எனப்படும் பேச்சு மொழித் தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா.
மூவகை கவிஞர்கள்
பேச்சு மொழியைக் கவிதையில் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உள்ளனர்.
புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
வால்ட் விட்மன் அமெரிக்காவை சேர்ந்தவர்.
கவிதை, இதழாளர், கட்டுரையாளர் ஆவார்
புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்.
வால்ட் விட்மனின் புகழ்பெற்ற நூல் = புல்லின் இதழ்கள் (Leaves of Grases)
ஸ்டெஃபான் மல்லார்மே
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.
ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.
இவரைப் புரிந்து கொள்வதன் மூலமே குறியீட்டியத்தையும் (Symbolism) புரிந்து கொள்ள முடியும்.
தன்னுடைய கவிதைகளுக்காக 1971 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
கவிதை என்றால் என்ன
கவிதை என்பது ஒரு பொருளன்று; அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்துவிடுவதற்காக முயகும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு.
எனவே, கவிதை என்பதே மொழிதான்.
கவிதைக்குள் உலவும் மொழியின் தர்க்கம் கவிதைக்கான உலகத்தைக் கட்டி எழுப்புகிறது.
கவிஞர் இந்திரன்
இவரின் இயற்பெயர் = இராசேந்திரன்
சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.
ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் விருது பெற்றுள்ளார்.
கவிஞர் இந்திரனின் நூல்கள்
கவிதை நூல்கள் = முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள்