மனிதர்கள் தவிர்த்த மற்றைய விலங்குகளுள் யானைகள், அதிக நாள்கள் வாழும் தரைவாழ் விலங்குகள் ஆகும்.
வேட்டை விலங்குகளாகவும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவையாகவும் இருக்கின்ற சிங்கம், புலி முதலியனவும் நெருங்க அஞ்சும் வலிமை கொண்டவை யானைகள்.
இவை குடும்பமாக வாழும்; மிகுதியான நினைவாற்றல் கொண்டவை.
யானைகளுள் மூன்று வகைகள் இன்று உலகில் எஞ்சியுள்ளன.
அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் ஆகியனவாகும்.
பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர் வாழ்கின்றன.
11TH TAMIL யானை டாக்டர்
யானை டாக்டர் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தின் முக்கியமான காட்டியல் வல்லுநர்களில் ஒருவர்.
யானைகளுக்காகத் தம் வாழ் நாளையே அர்ப்பணித்தவர்.
உலகப்புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.
வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வேணுமேனன் ஏலீஸ் விருதினை 2000ஆம் ஆண்டில் பெற்றார்.
தமிழகக் கோவில் யானைகளுக்கு வனப் புத்துணர்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அரசின் மூலம் செயல்படுத்தியவர்.
Ithil kuripp illalo