சொற்புணர்ச்சியின் போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடலடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்தறியவும் மொழி ஆளுமையைப் புரிந்து கொள்ளவும் இப்புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன.
உடம்ப்படுமெய்ப் புணர்ச்சி என்றால் என்ன
நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் உயிரெழுத்துகளாய் இருந்தால், உச்சரிப்பின்போது ஒலி உடன்பாடு இல்லாமல் இடைவெளி ஏற்படும்.
எனவே, உடன்படாத அவ்விரு மொழிகளையும் சேர்த்துப் புணர்க்க வரும் மெய், உடம்படுமெய் ஆகும்.
பதினெட்டு மெய்களுள் ய், வ் ஆகிய இரு மெய்கள் மட்டும் உடம்படுமெய்களாக வரும்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
குற்றியலுகரப் புணர்ச்சி என்றால் என்ன
குற்றியலுகரச்சொற்களில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும்போது, தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும்.
பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய், வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
ட், ற் என்னும் இரு மெய்களோடு ஊர்ந்துவரும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் வருமொழியோடு சேரும்போது ஒற்று இரட்டித்துப் புணரும்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
முற்றியலுகரப் புணர்ச்சி என்றால் என்ன
நிலைமொழியின் இறுதியில் உள்ள முற்றியலுகரமும் குற்றியலுகரத்தைப் போலவே தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும்.
பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய் வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
இயல்பீறு, விதியீறு – புணர்ச்சி
இயல்பீறாகவோ விதியீறாகவோ வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிரெழுத்துடன், க ச த ப என்னும் வல்லின மெய்களை முதலில் கொண்ட வருமொழிச்சொல் சேரும்போது அவற்றிடையே வல்லொற்று மிகுந்து புணரும்.
பூப்பெயர்ப் புணர்ச்சி என்றால் என்ன
பூ என்னும் சொல் நிலைமொழியாய் நிற்க வருமொழியின் முதலில் வல்லின மெய்யெழுத்துகள் வரும்போது வல்லினமெய் மிகுந்து புணர்வது மட்டுமன்றி, அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு.
எனினும், மெல்லின மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.
மெய்யீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன
நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து, மெய்யெழுத்தாக நிற்க வருமொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடனும் சேரும் புணர்ச்சியை மெய்யீற்றுப் புணர்ச்சி என்பர்.
தனிக்குறில்முன் ஒற்று – புணர்ச்சி
நிலைமொழி தனிக்குறில் சார்ந்த மெய்யெழுத்தாக நின்று, வருமொழியின் முதல் உயிரெழுத்தாக இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிக்கும்.
மகர ஈற்றுப் புணர்ச்சி என்றால் என்ன
நிலைமொழிச் சொல்லின் இறுதி எழுத்தாக மகரமெய் வரும்போது, அச்சொல் மூன்று நிலைகளில் புணரும்.
Tamil elukku +inri