11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
- சொற்கள் எழுத்தொலிகளால் ஆனவை.
- சொற்களின் புணர்ச்சியில், முதற்சொல்லின் இறுதி எழுதும் வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்திக்கின்றன.
மொழி முதல் எழுத்துகள்
மொழி முதல் எழுத்துக்கள் |
உயிர் எழுத்துக்கள்
12 |
மெய் எழுத்துக்கள்
10 |
மொத்தம் 22 |
- மொழி முதல் எழுத்துகள் = 22 ஆகும். அவை,
- உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
- மெய் எழுத்துக்கள் = தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துக்களோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன.
- மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும். (“ஙனம்” என்னும் சொல்லில் மட்டுமே “ங” வரும்)
- ட. ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை.
- ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது
மெய் எழுத்து ங்
- “ங்” என்னும் மெல்லின மெய் “விதம்” எனப் பொருள் தரும் “ஙனம்” என்னும் சொல்லில் மட்டுமு முதலில் வரும்.
- இந்தச் சொல்லும் தனியாக வராது.
- “அ, இ, உ” என்ற சுட்டெழுத்துகளுடனும் “எ, யா” என்னும் வினா எழுத்துகளுடனும் இணைந்து அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என்று வரும்.
- தற்காலத் தமிழில் இவற்றின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.
- “உங்ஙனம்” என்பது தற்போது தமிழகத்தில் வழக்கில் இல்லை. ஆனால், தமிழ் இலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இன்றும் இலங்கை தமிழர்கள் உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மொழி இறுதி எழுத்துகள்
மொழி இறுதி எழுத்துகள் |
உயிரெழுத்து
12 |
மெய்யெழுத்து
11 |
குற்றியலுகரம்
1 |
மொத்தம் 24 |
- மொழி இறுதி எழுத்துகள் = 24 ஆகும். அவை,
- உயிர் எழுத்துக்கள் 12 ம் சொல்லின் இறுதியில் வரும்.
- மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் 11 எழுத்துக்களும் சொல்லின் இறுதியில் வரும்.
- க், ச், ட், த், ப், ற் என்ற வல்லின மெய் ஆறும், ங் எனும் மெல்லின மெய் ஒன்றும் சொல்லில் இறுதியில் வருவதில்லை.
- பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.
- ஞ், ந், வ் மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன. ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.
புணர்ச்சி என்றால் என்ன
- நாம் பேசும் போது சில சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி ஒருசொல் போலவே பேசுகிறோம்.
- எழுதும் போதும் அவ்வாறே எழுதுகிறோம்.
- எ.கா
- தமிழ் + அரசி = தமிழரசி
- நாடு + பண் = நாட்டுப்பண்
- இவற்றில் முதலில் உள்ள “தமிழ், நாடு” ஆகிய சொற்களை “நிலைமொழி” என்பர்.
- இவற்றில் “அரசி, பண்” ஆகிய சொற்களை “வருமொழி” என்பர்.
- இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் இணைவதைப் “புணர்ச்சி” என்பர்.
- நிலைமொழியின் இறுதி எழுத்தும், இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் புணர்ச்சிக்கு உரியன ஆகும்.
உயிரீரு மெய்யீறு விளக்கம்
- நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது “உயிரீரு” எனப்படும்.
- நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது “மெய்யீறு” எனப்படும்.
உயிர்முதல், மெய்ம்முதல் விளக்கம்
- வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது ‘உயிர்முதல்’ எனப்படும்.
- வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது ‘மெய்ம்முதல்’ எனப்படும்.
எழுத்துக்களின் அடிப்படையில் புணர்ச்சி
- சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துகள் சந்திக்கும் முறையை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி
- இலக்கண வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்.
- இவற்றுள் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்தே வருகின்றன.
- இவ்விரு சொற்களும் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வந்தாலும் அவற்றின் புணர்ச்சி, எழுத்துக்களின் புணர்ச்சியே ஆகும்.
புணர்ச்சி என்பது யாது
- புணர்ச்சி என்பது எழுத்துக்களின் சந்திப்பாகவும் சொற்களின் சந்திப்பாகவும் அமைகிறது.
- எழுத்துக்களும் சொற்களும், ஒலிக்கூறுகளாகவும் பொருள் கூறுகளாகவும் சந்திக்கும் நிகழ்வே புணர்ச்சி ஆகும்.
குற்றியலுகர ஈறு
- சார்பெழுத்துகளுள் ஆய்தம் சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராது.
- குற்றியலுகரமும் (நுந்தை தவிர) குற்றியலிகரமும் இக்காலத்தில் சொல்லின் முதலில் வாரா.
- ஆயினும், குற்றியலுகரத்தின் ஆறு வகைகளும் சொல்லின் இறுதியில் வருகின்றன.
- குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி, குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலைமொழி எனப்படும்
குறிப்பு
- குற்றியலுகரத்தின் வகைகள் = ஆறு
- இலக்கண வகையில் சொற்களின் வகைகள் = நான்கு
- மொழி முதல் எழுத்துக்கள் = 22
- மொழி இறுதி எழுத்துக்கள் = 24.
- இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்
- காப்பிய இலக்கணம்
- வை.மு.கோதைநாயகி
- இலக்கியத்தில் மேலாண்மை
- அதிசய மலர்
- தேயிலைத் தோட்டப் பாட்டு
- புறநானூறு
- சங்கக்காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக