ஜேவிபி குழு

ஜேவிபி குழு

ஜேவிபி குழு
ஜேவிபி குழு

தார் கமிசன்

      இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, பல்வேறு மாநிலங்களில் மொழிவாரி மாநிலக் கோரிக்கை எழுந்தது. இதனை ஆராய “எஸ்.கே.தார் கமிசன்” (S.K.Dhar Commission) அமைக்கப்பட்டது. ஆனால் இக்குழு, இந்தியாவில் மொழிவழி மாநிலங்களை பிரிப்பதை எதிர்த்து, நிர்வாகக் காரணங்களுக்காக வேண்டுமானால் (recommended the reorganisation of states on the basis of administrative convenience rather than linguistic factor) இந்தியாவை பிரிக்கலாம் என பரிந்துரை செய்தது.

ஜேவிபி குழு

       இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனை முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக காங்கிரஸ் கட்சி “ஜெய்ப்பூரில்” நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், நேரு, படேல் மற்றும் பட்டாபி சீதராமையா ஆகியோர் அடங்கிய “ஜேவிபி குழுவை” அமைத்தது. மொழிவாரி மாகாண ஆணையத்தின் (தார் கமிஷன்) பரிந்துரைகளை ஆய்வு செய்ய காங்கிரஸால் ஜேவிபி குழு அமைக்கப்பட்டது.

ஜேவிபி குழு உறுப்பினர்கள்

       தார் கமிசன் தனது அறிக்கையை அளித்த அதே 1948, டிசம்பர் மாதத்தில், காங்கிரஸ் கட்சி “ஜேவிபி குழுவை” அமைத்தது. இதுவும் ஒரு “மொழிவாரி மாநிலங்கள் ஆணையம்” (The Linguistic Provinces Committee) ஆகும். இக்குழுவிற்கு தலைவராக எவரும் நியமிக்கப்படவில்லை. இக்குழுவின் உறுப்பினர்கள்,

  1. ஜே – ஜவஹர்லால் நேரு
  2. வி – வல்லபாய் படேல்
  3. பி – பட்டாபி சீதராமையா
ஜேவிபி குழு
ஜேவிபி குழு

ஜேவிபி குழு பரிந்துரைகள்

      இக்குழு மொழி மக்களை ஒன்று சேர்ப்பதைப் போலவே, பிரிக்கவும் செய்யும். எனவே மொழியை மட்டும் அளவுகோலாக கொண்டு மாகாணங்களை மறுசீரமைப்பு செய்வது பொருந்தாது என்று எண்ணி, மொழிவாரியாக புதிய மாகாணங்களை அமைப்பதை சில ஆண்டுகளுக்கு தள்ளிப்போட்டது. இக்குழு தனது அறிக்கையை, 1949, ஏப்ரல் மாதம் தனது அறிக்கையை காங்கிரஸ் கட்சியிடம் சமர்ப்பித்தது. அதில் மொழிவாரி மாகாண கோரிக்கை நிராகரிக்கப்பட்டது (formally rejected language as the basis for reorganisation of states.)

  1. மாநிலங்களின் மறுசீரமைப்பின் மொழியியல் காரணியை குழு நிராகரித்தது.
  2. குழு 1949 இல் தார் கமிஷனின் நிலைப்பாட்டை தனது அறிக்கையில் மீண்டும் உறுதிப்படுத்தியது.
  3. நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்க குழு பரிந்துரைத்தது // The committee recommended the reorganization of States on the basis of security, unity and economic prosperity of the nation.
  4. புதிய மாகாணங்களை உருவாக்குவது சில வருடங்கள் தாமதப்படுத்தப்பட வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது, இதனால் அவர்கள் மற்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியும் என்றது.

இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலம்

       ஆகஸ்ட் 1951 இல், காங்கிரஸ்காரரும் காந்தியத் தலைவருமான சுவாமி சீதாராம் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். முப்பத்தைந்து நாட்களுக்குப் பிறகு அவர் தனது உண்ணாவிரதத்தை முறித்துக் கொண்டபோது, ​​மற்றொரு காந்திய சீடரான பொட்டி ஸ்ரீராமுலுவால் டிசம்பர் 1952 இல் இயக்கம் புதுப்பிக்கப்பட்டது. ஆந்திர தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாக “பொட்டி ஸ்ரீராமுலு” சென்னையில் 1952-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதத்தை துவக்கினார்.

      தெலுங்கு மற்றும் தமிழ் மக்களிடையே பொதுக் கருத்து ஏற்பட்டால் சென்னை நகரம் சேராத ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என ராஜ்யசபையில் நேரு அறிவித்தார். ஆனால் இக்கோரிக்கையை பொட்டிஸ்ரீராமுலு நிராகரித்தார். “தென்னக காந்தியவாதி” எனப்படும் பொட்டி ஸ்ரீராமுலு, 56 நாள் தொடர் உண்ணாவிரதத்தின் முடிவாக தனது உயிரை தியாகம் செய்தார். இவரின் உயிர்த்தியாகத்தால், தெலுங்கு மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் உதயம் 1953

       1953, அக்டோபர் மாதம் இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆத்திர மாநிலத்தை, பெரும் கட்டாயத்தின் பேரில் கொண்டு வந்தது இந்திய அரசு. மதராஸ் மாகாணத்தில் இருந்து, தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை பிரித்து, புதிய ஆந்திர மாநிலம் உருவாகியது.  இதன் முதலமைச்சராக தி.பிரகாசம் நியமிக்கப்பட்டார்.

மொழிவாரி மாநிலங்கள்

       ஆந்திராவின் உருவாக்கம் பிற மொழியியல் குழுக்களை தங்கள் சொந்த மாநிலத்திற்காக அல்லது மொழியியல் அடிப்படையில் தங்கள் எல்லைகளை சரிசெய்வதற்காக தங்கள் இயக்கங்களைத் தீவிரப்படுத்த ஊக்குவித்தது. மக்கள் அழுத்தத்தின் கீழ், நேரு அரசாங்கம் ஆகஸ்ட் 1953 இல் மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை (SRC) நியமித்தது.

 

 

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

Leave a Reply