இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்
இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்

இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 4

         விதி 4 = 2,3 ஆகிய விதிகளின் படி உருவாக்கப்படும் சட்டங்கள் முதலாம் மற்றும் நான்காம் அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களை ஏற்படுத்தவும் துனைவுறு, சார்வுறு, விளைவுறு பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்தல் (Laws made under articles 2 and 3 to provide for the Amendment of the First and the Fourth Schedules and supplemental, incidental and consequential matters)

  1. 2 அல்லது 3-வது சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சட்டம் முதல் அட்டவணை மற்றும் நான்காவது அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களைச் செய்வதற்கான வகைமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும். அந்த வகைமுறைகள் பயனளிக்க நாடாளுமன்றம், தேவையெனக் கருதும் இணைப்பாகவும், சார்ந்துள்ளதாகவும், பலன் நிகழ்த்துவதாகவும் கூடிய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் (Any law referred to in article 2 or article 3 shall contain such provisions for the amendment of the First Schedule and the Fourth Schedule as may be necessary to give effect to the provisions of the law and may also contain such supplemental, incidental and consequential provisions (including provisions as to representation in Parliament and in the Legislature or Legislatures of the State or States affected by such law) as Parliament may deem necessary)
  2. அத்தகைய சட்டம் எதனையும் பிரிவு 368 படி திருத்தப்பட்டதாகக் கருதக் கூடாது (No such law as aforesaid shall be deemed to be an amendment of this Constitution for the purposes of article 368)

விதி 368-ன் கீழ் திருத்தப்படுவதில்லை

       இந்திய அரசியலமைப்பு சட்ட விதி நான்கின் கீழ் கூறப்படுவதாவது, விதி 2-ன் படி, புதிய மாநிலங்களை உருவாக்கவோ அல்லது இணைக்கவும் சட்டங்களை இயற்றாலும். மேலும் விதி 3-ன் படி புதிய மாநிலங்களின் எல்லைகளை மாற்றுதல், பெயரினை மாற்றுதல் போன்றவற்றை சட்டங்கள் மூலம் செயல்படுத்தலாம்.

       குறிப்பு = விதி 2 மற்றும் விதி 3 படி மேற்கொள்ளும் செயல்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 368-ஐ பயன்படுத்த வேண்டியது இல்லை. சாதாரண பெரும்பான்மையுடன், சாதாரண சட்ட நடவடிக்கை மூலம் மாற்றலாம் (Not to be considered as amendments of the Constitution under Article 368. This means that such laws can be passed by a simple majority and by the ordinary legislative process)

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்

       ஒரு மாநிலத்தின் பகுதிகளைக் குறைப்பதற்கான பாராளுமன்றத்தின் அதிகாரம் (பிரிவு 3 இன் கீழ்) இந்திய நிலப்பரப்பை ஒரு வெளிநாட்டு நாட்டிற்குக் கொடுக்கும் அதிகாரமும் உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்வி உச்சநீதிமன்றத்தில் 1960-ல் ஜனாதிபதி அளித்த குறிப்பின் காரணமாக விசாரணைக்கு வந்தது.

                அன்றைய மேற்குவங்கத்தில் இருந்த பெருபாரி (Berubari Case) கிராமத்தை, பாகிஸ்தானிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு எடுத்தது. இவ்வழக்கில் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டதின் பேரில் உச்சநீதிமன்றம் தனது கருத்தை தெரிவித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தும் ஏதும் இன்றி, இந்தியாவின் எந்த ஒரு ஆட்சிப் பகுதியையும் விட்டுக்கொடுக்க இயலாது என நீதிமன்றம் தெரிவித்தது (The Supreme Court held that the power of Parliament to diminish the area of a state (under Article 3) does not cover cession of Indian territory to a foreign country)

             எனவே பெருபாரி ஆட்சிப்பகுதியின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு உரிமை மாற்றம் செய்வதற்கு உடன்படிக்கை ஏற்படுத்தி, அதற்காக 9-வது சட்டத் திருத்தத்தை, இந்திய அரசு மேற்கொண்டது. இதன் அடிப்படியில் அப்பகுதி பாகிஸ்தான் வசம் சென்றது (Indian territory can be ceded to a foreign state only by amending the Constitution under Article 368. Consequently, the 9th Constitutional Amendment Act (1960) was enacted to transfer the said territory to Pakistan)           

குறிப்பு

  • இந்தியாவிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என்று 1969 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது (boundary dispute between India and another country does not require a constitutional amendment)
  • இது எந்த ஒரு வெளிநாட்டிற்கும் இந்திய நிலப்பரப்பை வழங்குவதை கொண்டிருக்கவில்லை என்றால், நிர்வாக நடவடிக்கை (done by executive action) மூலம் இதைச் செய்ய முடியும்

 

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

Leave a Reply