மாநிலங்கள் மறுசீரமைப்பு

மாநிலங்கள் மறுசீரமைப்பு

மாநிலங்கள் மறுசீரமைப்பு
மாநிலங்கள் மறுசீரமைப்பு

இந்திய அரசியலமைப்பு விதி 3

           புதிய மாநிலங்களை உருவாக்குதலும் ஏற்கனவே உள்ள மாநிலங்களின் பகுதிகளையோ எல்லைகளையோ அல்லது பெயர்களையோ மாற்றி அமைத்தல் (Formation of new states and alteration of areas, boundaries or names of existing states). இதன்படி நாடாளுமன்ற சட்டத்தின் மூலம்,

  1. ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பகுதியைப் பிறித்தோ அல்லது இரண்டு மாநிலங்களை அல்லது மாநிலங்களின் பகுதிகளை ஒன்றாக இணைத்தோ அல்லது ஒரு மாநிலத்தின் பகுதியை இணைத்தோ புதிய மாநிலங்களை அமைப்பதற்கும் (form a new State by separation of territory from any State or by uniting two or more States or parts of States or by uniting any territory to a part of any State)
  2. ஒரு மாநிலத்தின் பரப்பை அதிகரிப்பதற்கும் (increase the area of any State)
  3. ஒரு மாநிலத்தின் பரப்பை குறைப்பதற்கும் (diminish the area of any State)
  4. ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைப்பதற்கும் (alter the boundaries of any State)
  5. ஒரு மாநிலத்தின் பெயர் மாற்றுவதற்கும் அதிகாரம் உண்டு (alter the name of any State)

       மேற்கண்ட விதியினை செயல்படுத்தும் முன், அதற்கான சட்டமுன்வடிவு (Bill) எதனையும் பரிந்துரையின்றி நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் முன்னிலைப்படுத்த (introduced in the Parliament only with the prior recommendation of the  President) முடியாது. அத்தகைய சட்ட முன்வடிவு ஒரு மாநிலத்தின் பரப்பளவை, எல்லையை அல்லது பெயரைப் பாதிக்கக் கூடியதாயிருக்கும் பொது அந்தச் சட்டமுன்வடிவி பற்றிய கருத்தை சம்பந்தப்பட்ட மாநிலத்திடமிருந்து கேட்டறிய அதன் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மாநிலங்கள் மறுசீரமைப்பு

இவ்விதியை செயல்படுத்த இரண்டு நிபந்தனைகள் உள்ளன. அவை,

  1. குடியரசுத் தலைவரின் பரிந்துரை இல்லாமல் நாடாளுமன்றத்தின் எந்தவோர் அவையிலும் சட்டமுன்வறைவை முன்னிலைப்படுத்த முடியாது
  2. சட்டமுன்வரைவில் உள்ள கருத்துரு எந்தவொரு மாநிலத்தின் பரப்பு, எல்லை அல்லது பெயரைப் பாதித்தாலும், குடியரசுத் தலைவர் சட்ட முன்வடிவை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு அனுப்பி அதன் கருத்தைக் கேட்டறிய முடியும்.

                  ஜனாதிபதி (அல்லது பாராளுமன்றம்) மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களுக்கு கட்டுப்படவில்லை, சரியான நேரத்தில் கருத்துக்கள் பெறப்பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.

            ஆகவே, புதிய மாநிலங்களை உருவாக்க அல்லது தற்போதுள்ள மாநிலங்களின் பகுதிகள், எல்லைகள் அல்லது பெயர்களை அவற்றின் அனுமதியின்றி மாற்ற அரசியலமைப்பு பாராளுமன்றத்திற்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. அதாவது பாராளுமன்றம் தனது விருப்பத்திற்கு ஏற்ப இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றி (Parliament can redraw the political map of India according to its Will) அமைத்து மீண்டும் உருவாக்க முடியும். எனவே, எந்தவொரு மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது தொடர்ச்சியான எல்லை அமைப்பு ஆகியவை அரசியலமைப்பால் மாற்றப்படாது (the territorial integrity or continued existence of any state is not guaranteed by the Constitution) என்ற உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.

                இதனால் இந்தியாவை, “அழிக்கக்கூடிய மாநிலங்களை கொண்டுள்ள அழிக்க முடியாத ஒன்றியம்” (an indestructible union of destructible states) எனப்படுகிறது. ஆனால அமெரிக்க போன்ற நாடுகளில், புதிய மாநிலங்களை உருவாக்கவோ, எல்லைகளை மாற்றி அமைக்கவோ முடியாது. அதனால் தான் அந்நாடுகளை, “அழிக்க முடியாத மாநிலங்களை கொண்டுள்ள அழிக்கமுடியா ஒன்றியம்” (an indestructible union of indestructible states) எனப்படுகிறது.

அம்பேத்கர் கூற்று

மாநிலங்கள் மறுசீரமைப்பு
மாநிலங்கள் மறுசீரமைப்பு

             இந்திய யூனியன் என்பது மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின் விளைவாக இல்லை (அதை விருப்பப்படி உடைக்க முடியும்) மற்றும் அதன் கூறு மாநிலங்களுக்கு அதிலிருந்து பிரிந்து செல்ல சுதந்திரம் இல்லை என்பதைக் குறிக்க கூட்டமைப்புக்கு பதிலாக யூனியன் என்ற வார்த்தை வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்வாறு, எல்லைகளை மாற்றுவதன் மூலம் மாநிலங்களை உடைக்க முடியும், மறுசீரமைக்க முடியும், நாடு உடைக்க முடியாத ஒன்றியம். மாநிலங்களின் பெயர், எல்லைகளை அவர்களின் அனுமதியின்றி மத்திய அரசு மாற்றலாம். அதனால்தான் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவை “அழிக்க முடியாத மாநிலங்களின் ஒன்றியம்” என்று அழைத்தார். // Article 1(1) of the constitution of India says that “India, that is Bharat, shall be Union of States”. The word Union was deliberately chosen in place of Federation to indicate that Indian Union is not the result of an agreement between states (which can be broken at whim) and its component states have no freedom to secede from it. Thus, while states can be broken, reorganized by alternation of boundaries, the country is a union which cannot be broken. Central Government can change the name, boundaries of the states without their permission also. That is why Dr. B R Ambedkar called India as an “indestructible Union of destructible states”.

 

 

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

Leave a Reply