வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்
வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்

100-வது சட்டத்திருத்தம்

         இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Indian Constitution) 2௦15-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 1௦௦-வது சட்டத்திருத்தத்தின் (100th Amendment Act, 2015) படி, இந்தியாவில் இருந்து சில பகுதிகளை வங்கதேசத்திற்கு வழங்கவும், வங்கதேசத்தில் இருந்து சில பகுதிகளை இந்தியா பெறவும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடந்தது. அதன் படி

  1. இந்தியா வங்கதேசத்திற்கு, தன்னிடம் இருந்து 111 இடங்களை விட்டுக்கொடுத்தது (India transferred 111 enclaves to Bangladesh)
  2. வங்கதேசம் இந்தியாவிற்கு 51 இடங்களை வழங்கியது (Bangladesh transferred 51 enclaves to India)
  3. இந்த ஒப்பந்தத்தில் பாதகமான இடங்களை பரிமாற்றவும், 6.1 கிலோமீட்டர் நீளத்திற்கான வரையறுக்கப்படாத எல்லையை வரையறுக்கவும் செய்யப்பட்டது (the deal also involved the transfer of adverse possessions and the demarcation of a 6.1 km un-demarcated border stretch)

முதலாவது அட்டவணை

         மேற்கண்ட இந்த 3 பரிமாற்ற நிகழ்வுகளுக்காக, இந்தியாவின் நான்கு மாநிலங்களின் (அஸ்ஸாம், மேற்குவங்காளம், மேகாலயா மற்றும் திரிபுரா) எல்லைகளில் மாற்றம் ஏற்படுவதால், அரசியல் அமைப்பு சட்டத்தின் முதலாவது அட்டவணையில் (Amendment done in First Schedule of the Indian Constitution) உரிய திருத்தும் மேற்கொள்ளப்பட்டது.

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்

இந்த சட்டத் திருத்தத்தினால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தின் பயனாக மாற்றம் அடைந்தவை,

  • இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே சுமார் 4096.7 கிலோமீட்டர் எல்லை உள்ளது. 1947-ம் ஆண்டே எல்லைக்கமிஷனான “ராட்கிளிப் எல்லைக் கமிஷன்” (Radcliff Boundary Commission) படி இந்தியா மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்கதேசம்) இடையே எல்லைகள் முடிவு செய்யப்பட்டன.
  • ராட்க்ளிப் தீர்வின் (Radcliff Award) சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அவற்றை தீர்க்க இருநாடுகள் இடையே 195௦-ம் ஆண்டு “பேகி தீர்வு” (Bagge Award) அறிவிக்கப்பட்டது. மீண்டும் பிரச்சனைகளை தீர்க்க அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் பிரதமர் பெரோஸ் கான் நூன் இடையே “நேரு – நூன் ஒப்பந்தம்” (Nehru – Noon Agreement of 1958) ஏற்படுத்தப்பட்டது.
  • ஆனால் இதன் ஒரு பகுதியாக, பிரபலமான ”பெருபாரி நிலம்” (Berubari Union Case) வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு (Supreme Court) வந்தது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி, இந்தியப் பாராளுமன்றத்தில் 196௦-ம் ஆண்டு 9-வது சட்டத் திருத்தத்தின் (9th Amendment Act of 1960) மேற்கொள்ளப்பட்டது.
  • சட்டத் திருத்தும் மேற்கொள்ளப்பட்டாலும் அந்த நேரத்தில் தொடர்ச்சியான வழக்கு மற்றும் பிற அரசியல் சுமூகமற்ற நிலை காரணமாக, கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உள்ள பிரதேசங்கள் தொடர்பாக 1960 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (9 வது திருத்தம்) சட்டம் அறிவிக்கப்படவில்லை.
  • மே 16, 1974 அன்று, இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நில எல்லை நிர்ணயம் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.
  • ஆனால் இதற்கான அரசியல் அமைப்பு சட்டத் திருத்தும், ஒப்புதல் பெறப்படாததால் தோல்வியில் முடிந்தது.
  • “1974 இந்திய – வங்கதேச நில எல்லை ஒப்பந்தம்” (Land Boundary Agreement between India and Bangladesh, 1974) தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க ஏதுவாக 2௦11-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி இருநாடுகள் இடையே பாதகமான வசம் உள்ள பிரதேசங்கள்; மற்றும் உறைவிடம் பரிமாற்றம் தொடர்பாக நெறிமுறை ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • சம்பந்தப்பட்ட அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடன் (With support and concurrence of concerned State Governments) இந்த நெறிமுறை தயாரிக்கப்பட்டது.

 

 

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

Leave a Reply