11TH TAMIL அகராதிக்கலை
11TH TAMIL அகராதிக்கலை
- “குவலயம்” என்ற சொல்லின் பொருள் = உலகம்
- “உலகம்” எனப் பொருளை குறிக்கும் மற்ற சொற்கள் = வையம், ஞாலம், புவி, புவனம், அகிலம், அண்டம், பார், தாரணி, பூமி
அகராதி
- அகரம் + ஆதி = அகராதி
- “ஆதி” என்பதன் பொருள் = முதல்
அகராதி என்றால் என்ன
- ஒரு மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அகர வரிசையில் அமையும்படி தொகுத்து விளக்கும் நூல், அகராதி எனப்படும்.
- அகராதியின் மற்றொரு பெயர் = அகரமுதலி
- ஒரு மொழியின் சொல்வளங்காட்டும் கண்ணாடியே “அகராதி” ஆகும்.
தொல்காப்பியத்தில் பொருள் விளக்கம்
- தமிழில் சொல்லுக்குச் சொல் பொருள் விளக்கம் செய்யும்முறை தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
- தொல்காப்பியர், உரியியலில் பல சொற்களுக்குப் பொருள் விளக்கம் தந்துள்ளார்.
- “ஐ வியப்பாகும்” என்பதன் இலக்கணக்குறிப்பு = உரிச்சொல்
அகராதி நிகண்டு
- தமிழில் முதன் முதலாக அகராதி என்ற சொல்லைப் பயன்படுத்திய நூல் = 1594 இல் எழுதப்பட்ட “அகராதி நிகண்டு” என்னும் நூலாகும்.
- “அகராதி நிகண்டு” என்னும் நூலின் ஆசிரியர் = இரேவணச்சித்தர்.
நிகண்டு என்றால் என்ன
- ‘நிகண்டு’ என்பது, வடசொல் ஆகும்.
- நிகண்டு என்னும் சொல்லுக்குத் தமிழில் = சொற்றொகை, தொகுப்பு அகராதி, தொகையகராதி, தமிழ்ப்பா அகராதி, தொகுதி, கூட்டம் எனப் பல பொருள்களுள்ளன.
- நிகண்டுகள், தமிழிலுள்ள சொற்களைப் பல்வேறு பகுப்புகளுக்குட்படுத்தி, அவற்றிற்குரிய பொருளைப் பாடல் வடிவில் தந்தன.
முதல் நிகண்டு நூல்
- தமிழில் தோன்றிய முதல் நிகண்டு = சேந்தன் திவாகரம்
- சேந்தன் திவாகரம் நூலின் ஆசிரியர் = திவாகர முனிவர்.
- நிகண்டு நூல்களுள் சிறந்த நூல் = சூடாமணி நிகண்டைக் கூறுவர்.
- “சூடாமணி நிகண்டு” நூலின் ஆசிரியர் = மண்டல புருடர்.
சொற்களை பகுப்படுத்தல்
- அகராதியில் உள்ள மொத்த பெயர்த்தொகுதிகள் = 12.
- தெய்வம், மக்கள், விலங்கு, மரம், இடம் முதலான பன்னிரு பெயர்த்தொகுதியில், தமிழிலுள்ள சொற்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.
- எடுத்துக்காட்டாகச் சூடாமணி நிகண்டில், விலங்குகளின் இளமைப்பெயரை அறிய விரும்பினால், முதலில் விலங்கின் பெயர்த்தொகுதியைக் காண வேண்டும்.
- பின்னர், விலங்கின் பிள்ளைமரபு என்னும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு விலங்குகளுக்குரிய இளமைப்பெயர்களைக் காணலாம்.
- பறழ், பிள்ளை , குட்டி , குழவி, பார்ப்பு, குருளை, கன்று, மறி, போதகம் என்பனவெல்லாம் விலங்கின் இளமைப்பெயர்களே.
- அது மட்டுமன்று, அப்பெயர்களுக்குரிய விலங்குகள் எவையெவை என்பதும் கொடுக்கப்பட்டிருக்கும்.
வீரமாமுனிவரின் சதுரகராதி
- சதுரகராதியை உருவாக்கியவர் = வீரமாமுனிவர்.
- இவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
- வீரமாமுனிவரின் இயற்பெயர் = கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி.
- வீரமாமுனிவர் சதுரகராதியை தொகுத்த ஆண்டு = 1732
- “சதுர்” என்பதன் பொருள் = நான்கு.
- சதுரகராதி, “பெயர், பொருள், தொகை, தொடை” என சொற்களை நான்காக பகுத்து பொருள் விளக்கம் தருகிறது.
தமிழ் அகராதியை உருவாக்கிய வெளிநாட்டினர்
- வீரமாமுனிவரை போல, ஐரோப்பியர் பலர் தமிழ் அகராதிகளை உருவாக்கி உள்ளனர்.
- அவர்களுள் பெப்ரீசியஸ், இராட்லர், வின்சுலோ, பெர்சிவல், ஜி.யு.போப் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
தமிழ்ப்பேரகராதி
- சென்னை பல்கலைக்கழகத்தார் வெளியிட்ட அகராதி = தமிழ்ப் பேரகராதி அல்லது தமிழ் லெக்ஸிகன் என்பர்.
- இவ்வகராதியில் சொற்களுக்கான விளக்கங்கள் 7 கூறுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
- ஏழு கூறுகள் = சொல், சொல்லின் ஆங்கில ஒலிபெயர்ப்பு, இலக்கண பாகுபாடு, சொல்லின் தோற்றம், இனச்சொற்கள், தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லுக்கான பொருள், சொற்பொருளுக்கு ஏற்ற இலக்கிய மேற்கோள்.
கலைக்களஞ்சியம் என்றால் என்ன
- ‘செய்திகளைத் தொகுத்துத் தரும் பார்வை நூல்களைத்தான் கலைக்களஞ்சியம்’ என்கிறோம்.
- அறிஞர்கள், புலவர்கள், தலைவர்கள் ஆகியோர்தம் வரலாறுகள், தாவரங்கள், விலங்குகள் பற்றிய செய்திகள், புகழ்பெற்ற இடங்கள், பொருள்கள், நிகழ்ச்சிகள் தொடர்பான விவரங்கள் ஆகிய அனைத்துச் செய்திகளையும் உங்களுக்குத் தொகுத்துத் தரக்கூடிய நூல்கள் கலைக்களஞ்சியங்களே.
அகராதி வகைகள் யாவை?
- சிறுவர்க்கான அகராதிகள்
- எதுகை மோனை அகராதிகள்
- மரபுத்தொடர் அகராதிகள்
- வட்டாரவழக்கு அகராதிகள்
- கலைச்சொல் அகராதிகள்
- பழமொழி அகராதிகள்
- மேற்கோள் அகராதிகள்
- ஒரு பொருட் பன்மொழி அகராதிகள்
- எதிர்ச்சொல் அகராதிகள்
- ஒலிக்குறிப்பு அகராதிகள்
- ஒலிப்பு அகராதிகள்
- வணிகச் சொல் அகராதிகள்
- கணினிச் சொல் அகராதிகள்
- மருத்துவச் சொல் அகராதிகள்
- அலுவலகப் பயன்பாட்டுச் சொல் அகராதிகள்
- ஆட்சிமொழி அகராதிகள்
- இணைய அகராதிகள்
- பொறியியற் சொற்சார்ந்த அகராதிகள்
- தத்துவம்சார் அகராதிகள்
- சமயக் கருத்துசார்ந்த அகராதிகள்
- இலக்கியவியல் சார்ந்த அகராதிகள்
- அயற்சொல் அகராதிகள்
அகராதிகளும் அவற்றின் ஆசிரியர்களும்
அகராதி |
ஆசிரியர் |
சதுரகராதி |
வீரமாமுனிவர் |
தமிழ் – ஆங்கில அகராதி |
பெப்ரீஷியஸ் |
பட அகராதி |
இராமநாதன் |
தமிழ்ச்சொற்பிறப்பியல் ஒப்பியல் அகராதி |
ஞானப்பிரகாச அடிகள் |
திராவிடச் சொற்பிறப்பியல் அகராதி |
பரோ, எமினோ |
பழமொழி அகராதி |
பெர்சிவல் |
நிகண்டுகளும் அவற்றின் ஆசிரியர்களும்
நிகண்டு |
ஆசிரியர் |
திவாகர நிகண்டு |
திவாகரர் |
பிங்கல நிகண்டு |
பிங்கலர் |
சூடாமணி நிகண்டு |
மண்டல புருடர் |
அகராதி நிகண்டு |
சிதம்பர ரேவணசித்தர் |
கயாதர நிகண்டு |
கயாதரர் |
காங்கேயர் |
-
- யுகத்தின் பாடல்
- பேச்சுமொழியும் கவிதைமொழியும்
- நன்னூல் பாயிரம்
- ஆறாம் திணை
- இலக்கணம் – மொழி மதல், இறுதி எழுத்துகள்
- சான்றோர் சித்திரம் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
- இயற்கை வேளாண்மை
- ஏதிலிக்குருவிகள்
- காவியம்
- திருமலை முருகன் பள்ளு
- ஐங்குறுநூறு
- யானை டாக்டர்
- இலக்கணம் – புணர்ச்சி விதிகள்
- இலக்கணம் – மெய்ம்மயக்கம்
- சான்றோர் சித்திரம் – ஆபிரகாம் பண்டிதர்
- மலை இடப்பெயர்கள் – ஓர் ஆய்வு
- காவடிச்சிந்து
- குறுந்தொகை
- புறநானூறு
- வாடிவாசல்
- இலக்கணம் – பகுபத உறுப்புகள்
- சான்றோர் சித்திரம் – சி.வை.தாமோதரனார்
- சித்திரகவி
- திருக்குறள்
- 11TH TAMIL அகராதிக்கலை
- 11TH TAMIL அகராதிக்கலை
- 11TH TAMIL அகராதிக்கலை
- 11TH TAMIL அகராதிக்கலை
- தமிழக கல்வி வரலாறு
- பிள்ளைக்கூடம்
- நற்றிணை
- தொல்காப்பியம்
- இதழாளர் பாரதி
- இலக்கணம் – படைப்பாக்க உத்திகள்
- சான்றோர் சித்திரம் – ஜி யு போப்
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- சீறாப்புராணம்
- அகநானூறு
- பிம்பம்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- சான்றோர் சித்திரம் – இரசிகமணி தி கே சிதம்பரனார்
- காலத்தை வென்ற கலை
- ஆத்மாநாம் கவிதைகள்
- குற்றாலக் குறவஞ்சி
- திருச்சாழல்
- இசைத்தமிழர் இருவர்
- கலைச்சொல்லாக்கம்
- இலக்கணம் – நிறுத்தக்குறிகள்
- சான்றோர் சித்திரம் – சங்கரதாசு சுவாமிகள்
- காற்றில் கலந்த பேரோசை
- புரட்சிக்கவி
- பதிற்றுப்பத்து
- சிந்தனைப் பட்டிமன்றம்
- இலக்கணம் – ஆக்கப்பெயர்கள்
- சான்றோர் சித்திரம் – மயிலை சீனி வேங்கடசாமி
- தாகூரின் கடிதங்கள்
- ஒவ்வொரு புல்லையும்
- தொலைந்து போனவர்கள்
- மனோன்மணியம்
- செல்வி
- இலக்கணம் – மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
- சான்றோர் சித்திரம் – திரு வி கலியாணசுந்தரனார்
- 11 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 11 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 11 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 11 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக