பசல் அலி குழு

பசல் அலி குழு

பசல் அலி குழு
பசல் அலி குழு

மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்

       மொழிவாரி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டவுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உதித்தது. இதற்காக இந்திய அரசு 1953-ம் ஆண்டு டிசம்பர் மாதம், நீதிபதி பசல் அலி தலைமையில் “மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்” (The States Reorganisation Committee) அமைத்தது.

பசல் அலி குழு உறுப்பினர்கள்

       டிசம்பர் 1953-ல் பசல் அலி (Fazal Ali Commission) தலைமையில் கமிசன் அமைக்கப்பெற்றது. அதன் இரண்டு உறுப்பினர்கள், எச்.என்.குன்ஸ்ரு மற்றும் கே.எம்.பணிக்கர் (two members were K.M. Panikkar and H.N. Kunzru) ஆவர்.

பசல் அலி குழு அறிக்கை

      இக்குழு பலக்கட்ட ஆய்வுக்கு பின்னர் தனது அறிக்கையை, 1955 செப்டம்பர் மாதம் அரசிடம் சமர்ப்பித்தது. அதில் மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை மறுசீரமைக்கலாம் (accepted language as the basis of reorganisation of states) என்று தெரிவித்தது. ஆனால் “ஒரு மாநிலம் – ஒரு மொழி” (One Language – One State) என்ற கோரிக்கையை அது நிராகரித்தது. நாட்டின் அரசியல் அலகுகளை மறுவடிவமைப்பதில் இந்தியாவின் ஒற்றுமை முதன்மைக் கருத்தாக கருதப்பட வேண்டும் என்பதே இக்குழுவின் இலக்காக இருந்தது.

     கமிஷனின் பரிந்துரைகள் சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நவம்பர், 1956ல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் செயல்படுத்தப்பட்டன. இந்தியாவின் மாநில எல்லைகள் 14 மாநிலங்கள் மற்றும் 6 மத்திய நிர்வாகப் பகுதிகளை அமைக்க மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று கூறியது.

பசல் அலி குழு
பசல் அலி குழு

வழிகாட்டு குறிப்புகள்

       மாநிலங்களை மறுசீரமைக்கும் பொழுது, கணக்கில் கொள்ள வேண்டிய நான்கு முக்கிய குறிப்புகள் பசல் அலி குழுவிற்கு வழங்கப்பட்டது. அவை,

  1. இந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்புக்கும் ஊரு நேராவண்ணம் மாநிலங்கள் மாற்றி அமைக்கப்படுத்தல் வேண்டும் // Preservation and strengthening of the unity and security of the country.
  2. மொழியியல் மற்றும் கலாச்சார ஒருமைப்பாடு // Linguistic and cultural homogeneity.
  3. நிதி, பொருளாதார மற்றும் நிர்வாகக் கருத்தாய்வுகளை கணக்கில் கொள்ள வேண்டும் // Financial, economic, and administrative considerations.
  4. ஒவ்வொரு மாநில மக்களுக்கும், மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் நன்மை விளைவிக்கும் வகயில் திட்டமிடல் மற்றும் மேம்படுத்தல் இருக்க வேண்டும் // Planning and promotion of the welfare of the people in each state as well as of the nation as a whole.

பசல் அலி குழுவின் பரிந்துரை

  • இக்குழு மொழிவழி மாநிலங்கள் அமைவதை பரிந்துரை செய்தது.
  • ராஜபிரமுக அமைப்புகள், முன்னாள் சமஸ்தானங்களுடனான சிறப்பு ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • மாநிலங்களை நான்கு பிரிவுகளாக இருப்பதை ரத்து செய்யக் கூறியது
  • சட்டப்பிரிவு 371-ன் மூலம் இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட பொதுக் கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும் // The general control vested in Government of India by Article 371 should be abolished
  • பின்வரும் 3 மாநிலங்கள் மட்டுமே யூனியன் பிரதேசங்களாக இருக்க வேண்டும்: அந்தமான் & நிக்கோபார், டெல்லி மற்றும் மணிப்பூர் // Only the following 3 states should be the Union Territories: Andaman & Nicobar, Delhi and Manipur.
  • மற்ற பகுதி-சி/டி பிரதேசங்கள் பக்கத்து மாநிலங்களுடன் இணைக்கப்பட வேண்டும் // The other Part-C/D territories should be merged with the adjoining states
  • மாநிலங்களை மொத்தம் 16 மாநிலங்களாகவும், 3 மத்திய நிர்வாகப் பகுதியாகவும் பிரிக்க பரிந்துரை செய்தது // It suggested the reorganization of 27 states of various categories into 16 states and 3 Union Territories.

பசல் அலி குழுவின் முக்கிய முடிவுகள்

  • ‘ஒரு மொழி, ஒரே மாநிலம்’ கோட்பாட்டை நிராகரித்தது // It rejected the ‘one language, one state’ theory.
  • நாட்டின் அரசியல் பிரிவுகளை மறுவடிவமைப்பதில் இந்தியாவின் ஒற்றுமையே முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடாக இருந்தது // Its position was that India’s unity should be the primary consideration in any redrawing of the country’s political units.

மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956

       பசல் அலி கமிசனின் பரிந்துரையை ஆராய்ந்த இந்திய அரசு, அவற்றில் சில மாறுதல்களை செய்து, 1956-ம் ஆண்டு 7-வது சட்டத் திருத்தத்தை (7th amendment Act, 1956) மேற்கொண்டு, “மாநில மறுசீரமைப்பு சட்டம், 1956” (State reorganisation Act, 1956) செயல்படுத்தியது. இதன் படி “அ பிரிவு” (A States) மாநிலங்கள் மற்றும் “ஆ பிரிவு” (B States) மாநிலங்கள் ஆகியவற்றை இணைத்தும், “இ பிரிவினை” (C States) ரத்து செய்தும், புதிய சட்டத்தை செயல்படுத்தியது. இறுதியாக 1956, நவமபர் 1-ம் தேதி, இந்தியாவில் மொத்தம் 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் இருந்தன.

மாநிலங்கள்

யூனியன் பிரதேசங்கள்

1.        ஆந்திரப் பிரதேசம்

2.        அஸ்ஸாம்

3.        பீகார்

4.        பம்பாய்

5.        ஜம்மு காஸ்மீர்

6.        கேரளா

7.        மத்தியப்பிரதேசம்

8.        மதராஸ்

9.        மைசூர்

10.     ஒரிசா

11.     பஞ்சாப்

12.     ராஜஸ்தான்

13.     உத்திரப்பிரதேசம்

14.     மேற்கு வங்காளம்

1.        அந்தமான் நிகோபார் தீவுகள்

2.        டெல்லி

3.        ஹிமாச்சலப் பிரதேசம்

4.        லட்சத்தீவுகள், மினிக்காய் மற்றும் அமிந்திவி தீவுகள்

5.        மணிப்பூர்

6.        திரிபுரா

பசல் அலி குழு
பசல் அலி குழு
  • 1956 மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் படி, புதிய மாநிலமாக கேரளா உருவாகியது. திருவிதாங்கூர் மற்றும் கொச்சின் பகுதியை இணைத்தது. மேலும் மதராஸ் மாகாணத்தில் இருந்து மலபார் மாவட்டத்தை பிரித்து, கேரளாவுடன் சேர்க்கப்பட்டது.
  • மதராஸ் மாகாணத்தில் இருந்து “லட்சத்தீவுகள், மினிக்காய் தீவுகள் மற்றும் அமிந்திவி தீவுகளை” பிரித்து தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்டது (created the new union territory of Laccadive, Minicoy and Amindivi Islands from the territory detached from the Madras state)

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

9. UNION AND ITS TERRITORY

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

Leave a Reply