நாடுகளின் ஒன்றியம்

நாடுகளின் ஒன்றியம்

நாடுகளின் ஒன்றியம்
நாடுகளின் ஒன்றியம்

ஒன்றியத்தின் பெயரும் ஆட்சி நிலவரையும் (விதி 1)

  1. இந்தியா எனும் பாரதம், மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாக இருக்கும் (India, that is Bharat, shall be a Union of States)
  2. அதன் மாநிலங்களும் அவற்றின் எல்லைகளும் முதல் அட்டவனியில் குறிக்கப்பட்டப்படி அமைந்தனவாகும் (The States and the territories thereof shall be as specified in the First Schedule)
  3. இந்தியாவின் ஆட்சிப்ப்பரப்பு என்பது (The territory of India shall comprise)
    1. மாநிலங்களின் ஆட்சிப் பகுதிகளையும் (the territories of the States)
    2. முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள யூனியன் பிரதேசங்களையும் (the Union territories specified in the First Schedule)
    3. சொந்தமாக்கிக் கொள்ளப்படும் மற்ற பகுதிகளையும் உள்ளடக்கியிருக்கும் (such other territories as may be acquired)

நாடுகளின் ஒன்றியம்

       இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் “விதி 1” கூறுவதாவது, “இந்தியா என்னும் பாரதம் ஒரு நாடுகளின் ஒன்றியமாகும். அது கூட்டாட்சி அரசுகளின் ஒன்றியம் அல்ல (Bharat as a ‘Union of States’ rather than a ‘Federation of States’)

       இந்தியா அதாவது பாரதம், அரசுகளைக் கொண்ட ஒரு யூனியன் (ஒன்றியம்) ஆகும் என அரசியலமைப்பு சட்டத்தின் முதல் விதி கூறுகிறது. நம் நாட்டை, இந்தியா என வழங்குவதா அல்லது பாரதம் என வழங்குவதா என்பது பற்றிய விவாதங்களின் இறுதியில், சபையினர் இருபெயர்களையும் இணைத்து, “இந்தியா என்னும் பாரதம்” (‘India, that is, Bharat’) எனப் பெயரிட்டனர்.

கூட்டாட்சி அல்ல ஒற்றையாட்சி / No Federalism, it is Union

       இந்தியக் குடியரசு ஓர் ஒன்றியமாக உள்ளதே தவிர, அது “நாடுகளின் கூட்டாட்சி” (Federation of States) அல்ல. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சிறப்பியல்பான “கூட்டாட்சி அரசாங்கம்” முறை இருந்தாலும், இந்தியா ஒரு ஒன்றிய அரசே ஆகும். “கூட்டாட்சி அரசு” என்ற வார்த்தைக்கு பதிலாக “நாடுகளின் ஒன்றியம்” (Union of States) என்ற வார்த்தையை சேர்த்ததற்கு அம்பேத்கர் அவர்கள் இரண்டு காரணங்களை கூறினார்,

  1. இந்திய கூட்டரசானது, அமெரிக்க அரசுகளை போல ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாகவில்லை எனவும் (the Indian Federation is not the result of an agreement among the states like the American Federation)
  2. இணைந்த உறுப்பு நாடுகளுக்கு (மாநிலம் அல்லது மாகாணம்) ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல உரிமை இல்லை (the states have no right to secede from the federation) எனவும் கூறினார்

         இந்தியக் கூட்டமைப்பு எனபது ஓர் ஒன்றியமாகும், அதனை பிரிக்க இயலாது. நாடு ஒரு முழுமையானது மற்றும் நிர்வாகத்தின் வசதிக்காக மட்டுமே வெவ்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டது.

இந்திய எல்லைப்பகுதிகள் / Territory of India

                இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 1-ன் படி, இந்தியாவின் எல்லைகளை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை

  1. மாநிலங்களின் எல்லை / territories of the states
  2. யூனியன் பிரதேசங்கள் / union territories specified in the First Schedule
  3. இந்திய அரசால் எந்நேரத்திலும் கையகப்படுத்தக்கூடிய இடங்கள் / such other territories as may acquired

         இந்திய அரசியல் அமைப்பு (Constitution of India) சட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்களும் அவற்றின் பிராந்திய அளவும் முதல் அட்டவணையில் (First Schedule) குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போதய நிலையில் (2௦21 வரை) 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. மாநிலங்கள் தொடர்பான அரசியலமைப்பின் விதிகள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும். இருப்பினும், மகாராஷ்டிரா, குஜராத், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், ஆந்திரா, தெலுங்கானா, சிக்கிம், மிசோரம், அருணாச்சல பிரதேசம், கோவா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு பொருந்தும் சிறப்பு விதிகள் (பகுதி XXI இன் கீழ்) மாநிலங்கள் தொடர்பான பொதுவான விதிகளை தாண்டி சில சிறப்பு விதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைகளில் (5th and 6th Schedule) மாநிலங்களுக்குள் தாழ்த்தப்பட்டோர் பகுதிகள் மற்றும் பழங்குடிப் பகுதிகளின் (Scheduled and tribal Areas) நிர்வாகம் தொடர்பாக தனித்தனி விதிகள் நடைமுறையில் உள்ளன.

               குறிப்பிடத்தக்க வகையில், ‘இந்திய எல்லைப்பகுதிகள்’ (Indian Territory) என்பது ‘இந்திய ஒன்றியம்’ என்பதை விட பரந்த வெளிப்பாடாகும், ஏனெனில் பிந்தையது மாநிலங்களை மட்டுமே உள்ளடக்கியது, முந்தையது மாநிலங்களை மட்டுமல்ல, யூனியன் பிரதேசங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படக்கூடிய பிரதேசங்களையும் எந்த நேரத்திலும் கையகப்படுத்த உள்ளடக்கியது. மாநிலங்களின் அரசியல் பிரதிநிதிகள், மைய அரசுடன் கூட்டாட்சி தத்துவ (Federalism) அடிப்படியில் தங்களின் அதிகாரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மறுபுறம், யூனியன் பிரதேசங்களும், மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட பிரதேசங்களும் மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன.

                ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், சர்வதேச சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட முறைகளின்படி இந்தியா வெளிநாட்டுப் பகுதிகளைப் பெற முடியும். அதாவது

  1. உடன்பாட்டின் மூலம் விட்டுக்கொடுத்தல் (Cession)
  2. சுவாதீனப்படுத்திக்கொள்ளல் (Occupation)
  3. கீழ்ப்படுத்துதல் (Subjugation)
  4. கையகப்படுத்தல் (Acquisition)
  5. விதிமுறை உண்டாக்குதல் (Prescription)

          போன்ற முறைகள் மூலம் பெறமுடியும். எடுத்துக்காட்டாக, அரசியலமைப்பு தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை, வெளிநாட்டு பகுதிகளான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கோவா, டையூ டாமன், புதுச்சேரி மற்றும் சிக்கிம் பகுதிகள் பிற நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

               

 

 

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

Leave a Reply