ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்
ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்

       ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலல்லாமல், ஜம்மு காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பு, கொடி மற்றும் நிர்வாக சுயாட்சி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் அல்லது சொத்து வாங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 370

          2௦19-ம் ஆண்டு வரை, இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் (29 States and 7 Union Territories) இருந்தன. இதுவரை, ஜம்மு காஸ்மீர் மாநிலத்திற்கு என்று தனி அரசியலமைப்பு சட்டமும், அம்மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டம் 37௦ (Article 370 of the Constitution of India) நடைமுறையில் இருந்தன.

       அனால் 2௦19-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. “அரசியலமைப்பு (ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு) உத்தரவு 2௦19” (The Constitution (Application to Jammu and Kashmir) Order, 2019) படி, இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த “அரசியலமைப்பு (ஜம்மு காஷ்மீர்) உத்தரவு 1954” (The Constitution (Application to Jammu and Kashmir) Order, 1954) காலாவதியானது. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி முதல், ஜம்மு காஷ்மீர் அதன் சிறப்பு அந்தஸ்தை இழந்தது.

        இதன் மூலம் இந்திய அரசியல அமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்ட மாநிலமாக ஜம்மு காஷ்மீர் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்னும் விதி 37௦, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் செயல்படாமல் தான் (the inoperative Article 370 continue to remain in the text of the Constitution of India) உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 35A

       சட்டப்பிரிவு 35A ஜம்மு & காஷ்மீரை “நிரந்தர குடியிருப்பாளர்கள்” என்று வரையறுக்கிறது மற்றும் J&K இன் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு, சொத்து கையகப்படுத்தல், உதவித்தொகை, தீர்வு மற்றும் பல போன்ற சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019

       மேலும் “ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2௦19” (Jammu and Kashmir Reorganisation Act, 2019) படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் (the union territory of Jammu & Kashmir and the union territory of Ladakh) அறிவிக்கப்பட்டன.

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்
ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்

28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள்

       இதனால் இந்தியாவின் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 29-ல் இருந்து 28 ஆக குறைந்தது. 7 ஆக இருந்த யூனியன் பிரதேசத்தின் எண்ணிக்கை 9 ஆக (29 States and 9 Union Territories) உயர்ந்தது. 2௦21-ல் இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விவரம்

மாநிலங்கள் யூனியன் பிரதேசம்
1.        ஆந்திரப் பிரதேசம்

2.        அஸ்ஸாம்

3.        பீகார்

4.        பம்பாய் (மகாராஷ்டிரா)

5.        கேரளா

6.        மத்தியப்பிரதேசம்

7.        மதராஸ் (தமிழ்நாடு)

8.        மைசூர் (கர்நாடகா)

9.        ஓடிஸா

10.     பஞ்சாப்

11.     ராஜஸ்தான்

12.     உத்திரப்பிரதேசம்

13.     மேற்கு வங்காளம்

14.     குஜராத் (1960)

15.     நாகலாந்து (1963)

16.     ஹரியானா (1966)

17.     ஹிமாச்சலப் பிரதேசம் (1971)

18.     மணிப்பூர் (1972)

19.     திரிபுரா (1972)

20.     மேகாலயா (1972)

21.     சிக்கிம் (1975)

22.     மிசோராம் (1987)

23.     அருணாசலப்பிரதேசம் (1987)

24.     கோவா (1987)

25.     சத்தீஸ்கர் (2000)

26.     உதிரக்கானண்ட் (2000)

27.     ஜார்க்கண்ட் (2000)

28.     தெலுங்கானா (2014)

1.        அந்தமான் நிகோபார் தீவுகள்

2.        தாத்ரா நாகர் ஹவேலி (1961)

3.        டாமன், டையூ (1962)

4.        புதுச்சேரி (1962)

5.        சண்டிகர் (1966)

6.        லட்சத்தீவுகள்

7.        டெல்லி

8.        ஜம்மு காஷ்மீர் (31 அக்டோபர் 2019)

9.        லடாக் (31 அக்டோபர் 2019)

 

 

 

 

1. NATIONAL SYMBOLS OF INDIA / இந்திய தேசிய சின்னங்கள்

2. INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

9. UNION AND ITS TERRITORY

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

Leave a Reply