11 TH TAMIL நன்னூல்
11 TH TAMIL நன்னூல்
- நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது.
- தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இத்தகைய அமைப்பினை காணலாம்.
பாயிரம் என்றால் என்ன
- நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும் அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றப் பேசுவது பாயிரமாகும்.
- “ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே”
பாயிரத்தின் வேறு பெயர்கள்
- பாயிரதிற்கு உரிய ஏழு பெயர்கள்,
-
- முகவுரை = நூலுக்கு முன் சொல்லப்படுவது
- பதிகம் = ஐந்து பொதுவும், 11 சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.
- அணிந்துரை
- புனைந்துரை = நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்துச் சொல்வது
- நூன்முகம் = நூலுக்கு முகம்போல முற்பட்டிருப்பது
- புறவுரை = நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றை நூலின் புரத்திலே சொல்வது
- தந்துரை = நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து சொல்வது.
-
பாயிரத்தின் வகைகள்
- பாயிரம் இரண்டு வகைப்படும். அவை,
-
- பொதுப்பாயிரம்
- சிறப்புப் பாயிரம்
-
நன்னூல் பொதுப்பாயிரம்
- பொதுப்பாயிரத்தில் கூறப்படும் செய்திகள் = 5
- நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.
சிறப்புப்பாயிரம் இலக்கணம்
- சிறப்புப்பாயிரத்தில் கூறப்படும் செய்திகள் = 8
- நன்னூல் கூறும் எட்டுச் செய்திகளையும் செம்மையாக தெரிவிப்பது சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும். அவை,
-
- நூலாசிரியர் பெயர்
- நூல் பின்பற்றிய வழி
- நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு
- நூலின் பெயர்
- தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு
- நூலில் குறிப்பிடப்படும் கருத்து
- நூலைக் கேட்போர் (மாணவர்)
- நூலை கற்பதனால் பெறுகின்ற பயன்
-
- சிலர் மேலே கூறப்பட்டுள்ள எட்டு செய்திகளுடன் கூடுதலாக மூன்று செய்திகளையும் சேர்த்து இலக்கணம் கூறுவார். அவை,
-
- நூல் இயற்றப்பட்ட காலம்
- நூல் அரங்கேற்றப்பட்ட அவைக்களம்
- நூல் இயற்றப்பட்டதற்கான காரணம்
-
பாயிரம் இல்லது பனுவல் அன்றே
- ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரன் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்ப்படாது.
அணிந்துரை என்றால் என்ன
- மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக் கொண்ட மகளிர்க்கு அணிகலன்களும் எழிலைத் தரும்.
- அவை பொன்று எல்லாவகை நூல்களுக்கும் முன்னர் அழகு தருவதற்காக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்.
நன்னூல் நூல் குறிப்பு
- நன்னூல், தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழி நூல் ஆகும்.
- இது பொ.ஆ. 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.
நன்னூல் நூல் அமைப்பு
- இரண்டு அதிகாரங்களை கொண்டுள்ளது.
-
- எழுத்து அதிகாரம்
- சொல் அதிகாரம்
-
- எழுத்து அதிகாரம் 5 பகுதிகளை கொண்டுள்ளது.
-
- எழுத்தியல்
- பதவியல்
- உயிரீற்றுப் புணரியல்
- மெய்யீற்றுப் புணரியல்
- உருபு புணரியல்
-
- சொல் அதிகாரம் 5 பகுதிகளை கொண்டுள்ளது.
-
- பெயரியல்
- வினையியல்
- பொதுவியல்
- இடையியல்
- உரியியல்
-
நன்னூல் ஆசிரியர் குறிப்பு
- நன்னூல் எழுதிய ஆசிரியர் = பவணந்தி முனிவர்
- சீயகங்கன் என்ற சிற்றரசர் கேட்டுக் கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் எனப் பாயிரம் குறிப்பிடுகிறது.
- ஈரோடு மாவட்டம், மேட்டுப்புத்தூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரான சந்திரப்பிரபாவின் கோவில் உள்ளது.
- இங்கே பவணந்தி முனிவரின் உருவச் சிற்பம் இன்றும் உள்ளது.
அருஞ்சொற்பொருள்
- பால் – வகை
- இயல்பு – இலக்கணம்
- மாடம் – மாளிகை
- அமை – மூங்கில்
இலக்கணக்குறிப்பு
- காட்டல், கோடல் = தொழிற்பெயர்கள்
- ஐந்தும் = முற்றும்மை
- கேட்போர் = வினையாலணையும் பெயர்
- மாநகர் = உரிச்சொற்றொடர்
- இளந்தமிழே
- தமிழ் மொழியின் நடை அழகியல்
- தன்னேர் இலாத தமிழ்
- தம்பி நெல்லையப்பருக்கு
- இலக்கணம் – தமிழாய் எழுதுவோம்
- வசனநடை கைவந்த வள்ளலார்
- பெருமழைக்காலம்
- பிறகொரு நாள் கோடை
- நெடுநல்வாடை
- முதல்கல்
- இலக்கணம் – நால்வகைப் பொருத்தங்கள்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- தமிழர் குடும்ப முறை
- விருந்தினர் இல்லம்
- கம்பராமாயணம்
- உரிமைத்தாகம்
- பொருள் மயக்கம்
- பரிதிமாற்கலைஞர்
- திருக்குறள்
- பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
- இதில் வெற்றிபெற
- இடையீடு
- புறநானூறு
- பாதுகாப்பாய் ஒரு பயணம்
- மறைமலையடிகள்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- மதராசப்பட்டினம்
- தெய்வமணிமாலை
- தேவாரம்
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்
- காப்பிய இலக்கணம்
- வை.மு.கோதைநாயகி
- இலக்கியத்தில் மேலாண்மை
- அதிசய மலர்
- தேயிலைத் தோட்டப் பாட்டு
- புறநானூறு
- சங்கக்காலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
- தொன்மம்
- இராசமாணிக்கனார்
- நமது அடையாளங்களை மீட்டவர்
- இரட்சணிய யாத்திரிகம்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக
- கவிதையியல்
- செவ்வியல் இலக்கியங்கள்
- அறவியல் இலக்கியங்கள்
- காப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள்
- பெருங்கதை
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- சமய இலக்கியங்கள்
- சிற்றிலக்கியங்கள்
- புனைகதை இலக்கியங்கள்
- நாடகவியல்
- தமிழ்த் திரைப்பட வரலாறு