டேனியல் டிஃபோ என்பவர் எழுதிய நூல் = ராபின்சன் குரூசோ
பொருள்வயின் பிரிவு = பொருள்வயின் பிரிவு என்பது பொருள் தேடப் போவதால் தலைவன், தலைவியை பிரிவது பற்றி கூறுகிறது.
நற்றிணை 153 வது பாடலில் “தனிமகனார்” அவர்கள் சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்று, சொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை, “வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி. வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்” என்கிறார்.
திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் பாதிரியார் கனடாவில் பிறந்தவர்.
தமிழ் அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கியது 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான்.
“ஓர் இனத்தை அளிப்பதற்கு அவர்கள் நூல்களை எரித்தால் போதும். அவர்கள் அறிவு மேலும் வளர்வதற்கு முடியாமல் நின்றுவிடும்.” எனக் கூறும் நூல் = ஃபாரன்ஹீட் 451
தமிழர் பாரம்பரிய நாள் = ஜனவரி 14 ஆம் நாள்
கனடாவில் முதல் முறையாக ஒரு புதிய சாலை ஒன்றுக்கு “வன்னி வீதி” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
பனியும் பனி சார்ந்த நிலத்தை ஆறாவது திணையாக கூறுகிறது இந்நூல்
அ. முத்துலிங்கம் ஆசிரியர் குறிப்பு
எழுத்தாளர் அ. முத்துலிங்கம், இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர்.
பணி தொடர்பாகப் பல நாடுகளுக்குப் பயணித்திருக்கும் இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
அ. முத்துலிங்கம் சிறுகதைகள்
அக்கா
மகராஜாவின் ரயில்வண்டி
திகிடசக்கரம்
வம்சவிருத்தி (1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசை பெற்றது)
வடக்கு வீதி (1999 ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசை பெற்றுள்ளது)